வாரிசு அரசியல் செய்யும் திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!!

Estimated read time 0 min read

ஊழல், ஜாதி அரசியல், அடாவடித்தனம், குடும்ப அரசியல் இவை நான்கும்தான் திமுக அரசின் நாற்காலியை தாங்கும் நான்கு கால்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

என் மண், என் மக்கள் பயணம் அண்ணாமலை விருத்தாச்சலத்தில் பேசினார்.  அப்போது, என் மண், என் மக்கள் பயணம், வரலாற்றுப் புகழ் மிக்க, ஆன்மீக புண்ணிய பூமியாகவும் சைவசமயத்தின் கேந்திரமாகவும் விளங்கும் விருத்தாச்சலம் மண்ணில், பொதுமக்களின் பெரும் ஆரவாரத்துடன் சிறப்பாக நடந்தேறியது.

சோழப் பேரரசர்களின் ராணுவ மையமாக விளங்கிய நகரம்.  இங்குள்ள  விருத்தகிரிஸ்வரர் கோவிலைக் கட்டியது செம்பியன் மகாதேவியாரின் கணவர்  கண்டராதித்த சோழராவார். எல்லா சோழ மன்னர்களும் இந்த கோவிலுக்கு தங்களது  சேவைகளை செய்துள்ளனர்.

ஊழல், ஜாதி அரசியல், அடாவடித்தனம், குடும்ப அரசியல் இவை நான்கும்தான் திமுக அரசின் நாற்காலியை தாங்கும் நான்கு கால்கள். இவற்றை தமிழகத்தில்  அறிமுகப்படுத்தி, வளர்த்துக் கொண்டிருப்பது திமுகதான். திமுக அமைச்சர்களின் 11 பேர் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் ஜெயிலிலும், ஒரு அமைச்சர் பெயிலிலும் இருக்கிறார்கள்.

இன்னும் ஐந்து அமைச்சர்கள் மீது, பாஜக ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக வாரிசு அரசியல்தான் செய்கிறது. தொண்டர்களுக்கோ, இளைஞர்களுக்கோ திமுகவில் வாய்ப்பு இல்லை. திமுகவில் பதவியில் இருப்பவர்களின் வாரிசுகள் மட்டும்தான் முன்னேற முடியும்.

லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான மனிதர் நமது பிரதமர் மோடி. அவரது தலைமையில், பொருளாதாரத்தில் உலக அளவில் 11 ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஊழலற்ற, குடும்ப அரசியல் இல்லாத மாற்றத்தை, தமிழகத்தில் மக்கள் விரும்புகிறார்கள்.

பாஜகவால் மட்டும்தான் நேர்மையான, மக்களுக்கான ஆட்சியைத் தரமுடியும்  என்பதற்கான எடுத்துக்காட்டுதான் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. வரும்  பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக  பொறுப்பேற்றதும், இந்தியா நன்றாக, வேகமாக, வலிமையாக வளரும். அதற்கு  தமிழகமும் இம்முறை துணை நிற்க வேண்டும் என அண்ணாமலை  கேட்டுக்கொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author