2024 நாடாளுமன்றத் தேர்தல், திமுகவின் அழிவு தொடக்கம்! – அண்ணாமலை

Estimated read time 0 min read

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோபாலபுரம் வேணுகோபால் சுவாமி கோவில் வளாகத்தில் ஒளிபரப்பப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியை கண்டுகளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,

மிக முக்கியமான சரித்திரம் நம் நாட்டில் நடந்திருக்கிறது.

500 ஆண்டுகளாக நம் மக்கள் பொறுமையாக இருந்தார்கள், தர்மத்தின் வழியில் ராமருக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில், பிரதமர் மோடி முக்கிய எஜமானாக இருந்து நடத்திக் கொடுத்திருக்கிறார்.

சமகாலத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற அக மகிழ்வு அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.

83 வயது வரை பேசாமல் இருந்த பாட்டி அவரின் ஆத்ம பலத்திற்கு வேண்டுதலுக்கு இன்று பலன் கிடைத்தது.

இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய் ஒரே மக்கள் ஒரே பிள்ளை என்பதை இந்த அயோத்தி ராமர் கோவில் நிகழ்வு எடுத்துரைத்துள்ளது.

அறவழியில் ஆன்மீக நெறியில் தர்மத்தின் வழியில் பாஜக சொன்னபடி ஆட்சியில் இருக்கும் பொழுதே அயோத்தியில் ராமனுக்கு கோவில் எடுத்துள்ளோம்.

வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் நாம் அனைவரும் நின்று உள்ளோம், கோபாலபுரம் வேணுகோபால் சுவாமி கோவிலில் இதைப் பார்க்க நம் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் பெரிய சட்ட போராட்டம் நடத்தி இந்த நிகழ்வை தமிழக மக்கள் பார்க்க ஏற்பாடு செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்தியது.

தமிழகத்தில் எங்கேயும் பிரச்சனை இல்லாமல் பொதுமக்கள் தனியார் கோவில்களில் இடங்களில் இந்து அறநிலையத்துறை கோவில்களில் பக்தியோடு மக்களுக்கு உணவு அளித்து, இந்த நிகழ்ச்சியை பார்க்க நீதிமன்ற அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது இங்கு இருக்கும் திமுக அரசு இந்து மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தி வருகிறது.

அறவழியில் தர்மத்தின் வழியில் வென்று காட்டுவோம் என்று சபதம் இருக்கிறோம் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.

கட்சியின் சார்பாக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் மனு தாக்கல் செய்தார், 21 காவல்துறையினர் எழுத்துப்பூர்வமாக தடை செய்திருந்தனர்.

வாய்மொழி தகவல்கள் துறை சார்பில் வழங்கப்பட்டிருந்தன. அதனை பார்த்த நீதிபதி எங்கும் தடை இல்லை என்று அறிவித்தார்.

வரும் திங்கட்கிழமை தடை விதித்த இடங்கள் குறித்து ரிட் பெட்டிஷன் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இருப்பதாக இந்த நிகழ்வுக்கு தடை செய்தது குறித்து உச்சநீதிமன்றம் நீதிபதி கண்டித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தை பொறுத்த வரை தனியார் இடங்களில் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்து உள்ளது.

அறநிலையத்துறை சார்ந்த கோவிலாக இருந்தால் அனுமதி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

திமுக அரசு சர்வாதிகள் தனமாக இதை முடக்க முழுமூச்சாக மூன்று நாட்களாக செயல்பட்டார்கள் என்று தெளிவாக தெரிகிறது. ராகுல் காந்தி அமர், அக்பர், ஆண்டனி என்று இருப்பார்.

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னதற்கு ராகுல் காந்தி கோபப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கும் மணிப்பூரில் தான் அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

1142 இடத்தில் சென்னையில் இந்த நிகழ்வு நடக்கிறது, இந்த வேணுகோபால் சுவாமி திருக்கோவில் நிர்வாகிகள் அன்போடு அழைத்ததின் பேரில் வந்தேன். எங்களைப் பொறுத்தவரை இதில் அரசியல் இல்லை. கேட்டு அனுமதி கொடுத்திருந்தால் இவ்வளவு பெரிய சட்ட போராட்டம் தேவையில்லை.

இந்து அறநிலையத்துறை வேண்டாம் என்று நான் சொல்வதற்கு இன்று மீண்டும் ஒரு காரணம் சேர்ந்துள்ளது. 2026 ஆம் பாஜக ஆட்சிக்கு வரும் போது இந்து அறநிலையத்துறை இருக்காது.

சேலம் மாநாட்டில் தமிழக மக்கள் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் பேசியது குறித்த கேள்விக்கு,

2024 பாராளுமன்றத் தேர்தல் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழிவு தொடக்கம்.

2014 ஆம் ஆண்டு மிக மோசமான தோல்வியை தழுவியது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆணவத்தில் பேசக்கூடாது. திமுக தலைவர் அவர் அப்பா அளவிற்கு தெளிவு கிடையாது.

ஜனாதிபதிக்கு அழைப்பு இல்லை என்று கனிமொழி பேசுகிறார், ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அவர் மற்றொரு நாள் கலந்து கொள்வதாக பிரதமருக்கு கடிதம் கூட எழுதி இருக்கிறார்.

பொய்யை பேசுவதற்காக குடும்பத்தை அறிமுகப்படுத்துவதற்காக சகோதரி கொடியேற்ற, சகோதரன் மேடையில் பேச, சகோதர மகன் தலைவராக இருக்க ஒரு மாநாடு நடத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author