இரண்டு மகளை நினைத்து கண்ணீர் வடிக்கும் பிரமாண்ட இயக்குனர் சங்கர்.. என்ன நடந்தது..?

Estimated read time 0 min read

இயக்குனர் சங்கர் குறித்து பெரிதாக அறிமுகம் தேவை கிடையாது. பிரம்மாண்ட இயக்குனர் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தவர்.

எளிமையான கதையாக இருந்தாலும் அதனை பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் எடுத்து தான் செய்த செலவுக்கு ஏற்ப பிரம்மாண்டத்தை கண் முன் காட்டக் கூடியவர்.

சொன்ன பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு பட்ஜெட்டை இயக்குனர் சங்கர் செலவு செய்கிறார் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சங்கர் மீது ஒரு பிணக்கு இருந்தாலும் கூட அவருடைய படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தது குறைவு என்று கூறலாம்.

இயக்குனர் சங்கர் படங்களுக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்படி தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடிய இயக்குனர் சங்கர் தன்னுடைய இரண்டு மகள்களை நினைத்து சொல்லுண்ணா துயரத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது.

இவருக்கு ஐஸ்வர்யா அதிதி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா காலத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற்றது என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்.

கிட்டத்தட்ட 2000 கோடி சொத்துக்கு அதிபதியானவர் அந்த கிரிக்கெட் வீரர் தாமோதரன் ரோஹித். பெரிய இடம் என்பதால் மனமுவந்து திருமணம் செய்து கொடுத்தார் இயக்குனர் சங்கர்.

ஆனால் திருமணம் ஆக ஆறு மாதத்திற்குள் வெடித்தது பிரச்சினை. தாமோதரன் ரோஹித் பல பெண்களுடன் தகாத தொடர்பில் இருக்கிறார் உள்ளிட்ட சில காரணங்களை கூறி தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார் ஐஸ்வர்யா சங்கர்.

அதன் பிறகு இரண்டு குடும்பத்திலும் பேசி புரிய வைத்தும் பயனில்லை. தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு வீட்டில் இருக்கிறார் ஐஸ்வர்யா சங்கர் என்ற கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இளைய மகள் அதிதியை மருத்துவர் ஆகும் முயற்சியில் எம்பிபிஎஸ் படிக்க வைத்திருக்கிறார் சங்கர் அப்பா கூறியதன் காரணமாக எம்பிபிஎஸ் படிப்பை படித்து முடித்து இருக்கிறார் அதிதி சங்கர்.

ஆனால், படித்து முடித்த பிறகு நான் மருத்துவராக மாட்டேன் சினிமாவில் ஹீரோயினாக போகிறேன் என்று கூறியிருக்கிறார் அதிதி சங்கர்.

சரி ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தால் போதுமா எனக் கூறி விருமன் பட வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார் சங்கர்.

அதன் பிறகு தன்னுடைய மருத்துவர் தொழிலை பார்ப்பார் என்று நம்பிக் கொண்டிருந்த ஷங்கருக்கு அதிதி சங்கர் வைத்த ஆப்பு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என்னவென்றால் அதிதி சங்கர் தன்னுடைய தந்தை ஷங்கரின் அனுமதி பெறாமலேயே தொடர்ச்சியாக இரண்டு படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதனை பார்த்த சங்கர் அதிர்ந்து போய் இருக்கிறார்.

ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என வாய்ப்பு கேட்டாய்.. ஆனால் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாய் என கேட்டிருக்கிறார். ஆனால் தொடர்ந்து நான் படம் படிக்கத்தான் போகிறேன் எனக் கூறியிருக்கிறார் அதிதி ஷங்கர்.

இப்படி தன்னுடைய இரண்டு மகள்களும் தன்னுடைய பேச்சை கேட்காமல் இருப்பதால் விரக்தியில் இருக்கிறாராம் இயக்குனர் சங்கர்.

இப்படி வீட்டில் மகிழ்ச்சி இல்லாத காரணத்தினால் தான் இவர் எடுத்துக்கொண்ட இந்தியன் 2 மற்றும் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு திரைப்படம் என இரண்டு படங்களும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லாமல் இழுத்தடித்துக்கொண்டே போகின்றது என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Please follow and like us:

You May Also Like

More From Author