செழியன் வாழ்க்கையில் மீண்டும் மாலினியால் உருவான மிக்ஜாம் புயல்.! இனி ஆய்சுக்கும் ஜெனியுடன் சேர முடியாத நிலை..

baakiyalakshmi today promo : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது பரபரப்பை இன்னும் அதிகமாக்க எழில் வாழ்க்கையில் ஒரு புயலை வீச புதிய கேரக்டரை உள்ளே இழுத்தார்கள்.

அதேபோல் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என நிரூபிக்க செழியன் வாழ்க்கையில் சடுகுடு விளையாட மாலினி கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள் இப்பொழுது பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் பாக்யா கேண்டினில் திடீர் சோதனை நடத்தினார்கள் உணவு கட்டுப்பாடு துறை.

லோகேஷின் 10 நிமிட வீடியோவை பல கோடி கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்.. அப்படி என்ன வீடியோ டா அது?

ஆனால் பாக்கியா சமையலில் எந்த குறையும் இல்லை அவர் நன்றாக சமைத்துள்ளார் குவாலிட்டியான உணவு செய்துள்ளார் என நிரூபித்து விட்டார். மற்றொரு பக்கம் கோபி ராதிகாவிடம் இதைக் கூற ராதிகா சந்தோசப்படுகிறார் எப்படியாவது பாக்கியா கேண்டின் இழுத்து மூடப்படும் என கோபி எதிர்பார்த்தார் ஆனால் அது நடக்கவில்லை. இப்படி ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க எழில் திருமணம் செய்து கொண்ட அமிர்தாவின் கணவர் உயிரோடு வந்துள்ளதால் அவர்கள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறது என்பது இனிமேல் தான் தெரியும்.

இப்படி பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெனியின் அப்பா செழியனிடம்  பேசுவதற்காக வர சொன்னார் செழியன் அவருக்காக உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மாலினி வந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

வேட்டையாட ஆரம்பித்த விஜயகாந்த்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் தொண்டர்கள் , ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

மாலினி செழியன் உடன் பேசிக் கொண்டிருப்பதை ஜெனியின் அப்பா பார்த்து விடுகிறார் உடனே மாலினி அவரிடம் நீங்க வருவதற்குள் பேசிவிட்டு கிளம்பி விடலாம் என்று நினைத்தேன் ஆனால் செழியன் தான்  விடவில்லை நைட் பேசிக்கலாம் செழியா வந்துடு என சொல்லிவிட்டு கிளம்புகிறார் இதனால் ஜெனியின் அப்பா செழியன்  மீது இன்னும் மிகுந்த கோபத்தை காட்டுகிறார்.

உடனே செழியன் அழுது கொண்டு தன்னுடைய அம்மாவை கட்டி பிடித்து நடந்த அனைத்தையும் கூறுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது செழியனை நிம்மதியாக வாழ விடாமல் புயல் போல் வீசி சென்றுள்ளார் மாலினி இது எங்க போய் முடியப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மீனாவிடம் சண்டை போடும் விஜயா.. ரூம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Please follow and like us:

You May Also Like

More From Author