2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலாகும் புதிய விதிகள்…

Estimated read time 1 min read

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் கேஒய்சி செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. பயனாளர்கள் சிம்கார்டுகளை வாங்குவதற்கு முன்பு அவர்களுடைய பயோமெட்ரிக் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் சிம்கார்டு வழங்கப்படும்.

2022-23 ஆம் ஆண்டு வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்வதற்கு வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகு வருமான வரி தாக்கல் செய்ய முடியாது எனவும் செயல்பாடுகளை மேற்கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் டிசம்பர் 31ஆம் தேதி உடன் பேங்க் லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான செயல்பாடுகளும் முடிவடைய உள்ளது. வங்கிகளுக்கான பாதுகாப்பு லாக்கர்களுக்கு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டால் மட்டுமே லாக்கர் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author