இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணை வெளியீடு!

Estimated read time 1 min read

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

2023-2025 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து அணி மூன்றாம் இடத்திலும் நீடித்து வருகின்றன.

மற்ற அணிகளும் புள்ளி பட்டியலில் முன்னேற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணி வரும் நவம்பர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

மேலும் வரும் ஜூலை மாதம் மேற்கிந்திய அணிக்கு எதிராகவும், ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிராகவும் தலா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இதையடுத்து அந்த அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

Fixture drop

Dates Times and Venues for our three-match Test series with @BlackCaps later this year

#NZvENG #EnglandCricket

— England Cricket (@englandcricket) April 9, 2024

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 07 ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 15ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணை :

முதல் போட்டி – நவம்பர் 28 – டிசம்பர் 2, கிறிஸ்ட்சர்ச் மைதானம்.

இரண்டாவது போட்டி – டிசம்பர் 6 – டிசம்பர் 10, வெலிங்டன் மைதானம்.

மூன்றாவது போட்டி – டிசம்பர் 14 – டிசம்பர் 18, ஹாமில்டன் மைதானம்.

Please follow and like us:

You May Also Like

More From Author