இந்திய மகளிர் ஹாக்கி அணி அபார வெற்றி : அரையிறுதிக்கு தகுதி !

Estimated read time 1 min read

ஐந்து பேர் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி  பெற்றது.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஐந்து பேர் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அந்த நாடுகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா ‘சி பிரிவில்’ அமெரிக்கா, போலந்து, நமீபியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றிருந்தது. இதன் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

அந்த வகையில் இந்தியா தனது லீக் சுற்றில் தோல்வியே அடையாமல் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றில் நியூசிலாந்து அணியுடன் விளையாடியது.

இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி அடுத்தடுத்து கோல் அடித்து வந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 1 கோல் மட்டுமே அடித்தது.

இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி சார்பில் ருதஜா தாதாசோ பிசல் 4 கோல்களும், தீபிகா சோரெங் 3 கோல்களும், மும்தாஜ் கான், மரியானா குஜூர் ஆகியோர் தலா 2 கோல்களும் அடித்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் இப்போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் ஹெபி ஓரிவா 1 கோல் அடித்தார். இதனால் இந்திய மகளிர் அணி 11-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Semi-Finals here we come!

Republic Day’s pride soaring 11X higher as Indian Women’s Team clinches a smashing victory in the FIH Hockey 5s World Cup Quarter-finals, Oman 2024!

Full-time:

India 11 – New Zealand 1

Goal Scorers:

2′ 25′ 29′ Deepika Soreng
9′ 22′ 26’… pic.twitter.com/ARLKPgmJZY

— Hockey India (@TheHockeyIndia) January 26, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author