புரோ ஹாக்கி : இந்தியா vs நெதர்லாந்து!

Estimated read time 1 min read

புரோ ஹாக்கி லீக் தொடர் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் விளையாடவுள்ளன.

5-வது புரோ ஹாக்கி லீக் தொடர் 9 அணிகளுக்கு இடையே பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின் இரண்டு சுற்று லீக் போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரில் வரும் 10ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதேபோல் ரூர்கேலாவில் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் தலா 2 முறை விளையாடவுள்ளது.

இந்திய அணி தனது முதலாவது லீக் போட்டியில் நேற்று ஸ்பெயின் உடன் விளையாடியது இதில் இந்திய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று இந்தியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது இரவு 7.30 மணிக்கு ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் நடைபெறவுள்ளது.

இவ்விரு அணிகளும் இது வரை 48 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இந்தியா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. 31 முறை நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 8 முறை போட்டி ட்ராவில் முடிந்துள்ளது.

மேலும் இந்தப் போட்டியில் நெதர்லாட்னது அணி 56 % வெற்றி பெறும் என்றும், இந்தியா 33 % வெற்றி பெறும் என்றும் 10% ஆட்டம் ட்ராவில் முடியும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author