TNPSC காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – என்ன காரணம்?

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசுத் துறைகளில் இரண்டாம் நிலையில் 5,529 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனை நிரப்புவதற்குக் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 -ம் தேதி நடைபெற்றது. 5,413 பதவிகளுக்கு, சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. முதல் நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். பின்னர், முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 -ம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவு வெளியாகவில்லை.

இந்த நிலையில், இதன் முடிவு வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி 12 -ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5,240 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, புதிதாக 620 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்துள்ளது. இதனால், இளைஞர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author