2035-க்குள் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையம்!

Estimated read time 1 min read

2035-ஆம் ஆண்டுக்குள் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி, 2040-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கூறியதாவது, இந்திய விண்வெளி நிறுவனம் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையத்தை அமைக்க செயல்பட்டு வருகிறது. இஸ்ரோ இந்த திட்டத்தை 2035-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும், 2040-க்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த திட்டங்கள் இஸ்ரோவின் லட்சியத் திட்டம். அதை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்” என்று கூறினார்.

2024-25 ஆம் ஆண்டிற்கு, இந்திய அரசாங்கம் விண்வெளித் துறைக்கு சுமார் ரூ.13,042 கோடி ஒதுக்கீடு செய்ய முன்மொழிந்துள்ளது. மேலும் ரோபோ மூலம் சந்திரனை ஆராய்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author