
செவ்வாய் கிரக ஆய்வு
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா 7 மாதங்களுக்கு முன் அனுப்பிய விண்கலம் மணிக்கு 19 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கடந்த வாரம் இலக்கை சென்றடைந்தது.
இவ்விண்கலம் சுமார் 47 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்தது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் தரைப்பகுதியில் பாறை படிமங்களில் உள்ள பொருட்களை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்து அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.