ஆன்மிகம்

சித்ரா பௌர்ணமி உற்சவம்

சித்ரா பௌர்ணமி உற்சவம்

சித்ரா பௌர்ணமி உற்சவம்தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள்பச்சைப்பட்டுடுத்தி தெப்பத்தில் இறங்கினார் திண்டுக்கல், ஏப்.28- திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில். இங்கு வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாப்படுவது வழக்கம். கடந்தாண்டு கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருந்த பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்தாண்டு கொரோனா இரண்டாம் அலை நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து பௌர்ணமி உற்சம் பக்தர்களின்றி நடத்தப்பட்டது.அரசின் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைப்படி நேற்று சித்ரா பவுர்ணமி உற்சவம் நடைபெற்றது. பச்சைப்பட்டுடுத்தி பெருமாள், குதிரையில் பவனி வந்து கோயில் வளாகத்தில் உள்ள தெப்பத்தில் இறங்கினார். பக்தர்களின்றி, கோயில் சேவார்த்திகள் மட்டும் கலந்து கொண்டனர்.
கரோனா பரவல்: தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு தடை

கரோனா பரவல்: தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு தடை

தஞ்சாவூர்: கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழக அரசுப் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. என்றாலும், கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட புராதன சின்னங்கள், நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தலங்களுக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்படி தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்கள் செல்ல வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.
பாதிரி லஷ்மி நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்

பாதிரி லஷ்மி நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணப் பெருமாளுக்கு புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ கைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஊர்ப் பொதுமக்கள் பலரும் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.
குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் பங்குனி உத்திரம்!

குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் பங்குனி உத்திரம்!

தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாக வருவது பங்குனி மாதம். பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். இது குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் புனித மாதமாக அமைகிறது. பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நாள் என்பதால் பௌர்ணமியின் பலன்களும் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி பல்வேறு சிறப்புகளை அளிக்கிறது. அதில் பங்குனி மாத பௌர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவதுடன், தமிழ்கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் 'பங்குனி உத்திரம்" தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. பங்குனி உத்திரம் நன்னாளில் இறைவனின் திருமணத்தை கண்டு வணங்குவது அனைத்து நலன்களையும் தரும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு வெகுவிரைவில் திருமண வரம் கிடைப்பதாக நம்பிக்கை. திருமணமானவர்கள் வாழ்வில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியான நிலை பெற பங்குனி உத்திர நாளில் க
அருள்மிகு ஏகாம்பரரேஸ்வரர் திருக்கோவில் திருவிழாவில் இன்று மரத்தேர் மகோஉற்சவம்

அருள்மிகு ஏகாம்பரரேஸ்வரர் திருக்கோவில் திருவிழாவில் இன்று மரத்தேர் மகோஉற்சவம்

அருள்மிகு ஏகாம்பரரேஸ்வரர் திருக்கோவில் திருவிழாவில் இன்று மரத்தேர் மகோஉற்சவம் நடைபெற்றது. தாண்டாவா நடன குழுவினரின் நடனம்பரதனாட்டிய நடனம்சிவனடியார்களின் கோலாட்டம்மற்றும் கையிலாய வாத்திய இசை என காஞ்சி திருவிழாக் கோலம்..பூண்டுள்ளது.. திருக்காட்சியில் சில காட்சிகள்பார்வைக்குஅனைவருக்கும் அவனருள் கிடைக்கட்டும்.. ஓம் நமச்சிவாயம்.
திருமணம் கைகூட இந்த விரதத்தைக் கடைப்பிடிங்க…

திருமணம் கைகூட இந்த விரதத்தைக் கடைப்பிடிங்க…

பங்குனி மாதத்தில் , பவுர்ணமியன்று, உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வந்தால், அந்த நாளை, பங்குனி உத்திரம் என்று கொண்டாடி வருகிறோம் .அந்தத் திருநாள் அன்று,  முக்கண்ணனும் பார்வதிதேவியும் ஐக்கிய ஸ்வரூபமாக திருவிளக்கு தீப ஒளியில் எழுந்தருள்வதாக ஐதீகம்.சூரிய பகவானை உத்திர நட்சத்திரத்தில் நாயகன் என்று கூறுவர் . உத்திர நட்சத்திரம் பூரணசந்திரனுடனும்  பொருந்தும் நாள் பங்குனி உத்திரம்.  இந்த நட்சத்திரத்திரம், சூரியன் சந்திரன் இருவரோடும்  தொடர்பு பெற்றிருப்பதால் இந்த திருநாளுக்கு அதிக சிறப்பு உண்டு.  பல தெய்வத் திருமணங்கள் இந்தப் புனிதமான பங்குனி உத்திரத் திருநாளில் தான் நிகழ்ந்தன.ஸ்ரீராமன் சீதாதேவி, லக்ஷ்மணன் ஊர்மிளா,  பரதன் மாண்டவி,  சத்ருக்னன் சுருதகீர்த்தி ஆகியோரின் திருமணங்கள் பங்குனி உத்திரத் திருநாளில் தான் மிதிலை நகரில்  நடந்தது .ஆண்டாள் ரங்கநாதர்,  தேவேந்திரன் இந்திராணி,  பிரம்மா சரஸ்வதி திர
வந்தவாசி ரங்கநாதர் கோவிலில் கருடக் கொடி

வந்தவாசி ரங்கநாதர் கோவிலில் கருடக் கொடி

வந்தவாசி ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி கருடக் கொடி ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன், ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதை முன்னிட்டு, முதல் நாள் உற்சவமான கருடக் கொடி ஏற்றும் வைபவம் நடைபெற்றது. சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, மந்திரங்கள் முழங்க, கோவில் பட்டாச்சார்யார்கள் கருடக் கொடியை ஏற்றினர். மேலும் இந்த வைபவத்தில் உபயதாரர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு உற்சவ மூர்த்தி கோவிலில் இருந்து முக்கிய மாடவீதிகள் வழியாக வீதி உலா வந்தார்.
முத்துமாரி அம்மனுக்கு அமாவாசை சிறப்பு பூஜைகள் மற்றும் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்

முத்துமாரி அம்மனுக்கு அமாவாசை சிறப்பு பூஜைகள் மற்றும் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, பூக்கள் கொண்டு சிறப்பலங்காரம் செய்யப்பட்டது. பம்பை, உடுக்கை முழங்க ஆராதனை நிகழ்வு நடைபெற்றது. வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர். இந்த அமாவாசை சிறப்பு பூஜைகள் அனைத்தும் சக்தி உபாசகர் ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.‌ அனைத்து பக்தர்களுக்கும் அமாவாசை அன்னதான குழு மூலம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். மாத பூஜையின் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைப்பார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூதபலி, உத்சவ பலியும், 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28-ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 5-வது நாளான நேற்று இரவு சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உடன் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் ஆறாவது நாளான இன்று இரவு 8 மணிக்கு மேல் சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-வது நாளான நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) மகா சிவராத்திரி அன்று இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் வைக்கப்பட்ட மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளித்தேரோட்டம் நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது