UPSC தேர்வு இறுதி முடிவுகள்! – 1016 பேர் தேர்வு

Estimated read time 1 min read

IAS, IPS, IFS பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை நேற்று UPSC வெளியிட்டது. இதில், ஆயிரத்து 16 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஆண்டுதோறும் IAS, IPS, IFS உள்ளிட்ட 24 விதமான மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

சிவில் சர்வீஸ் பதவிகளில் 1,143 காலியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 2023-ம் ஆண்டு மே 28-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற்றது. இதில், ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதினர். முதன்மைத்தேர்வுக்கு 14,624 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மெயின் தேர்வுக்கு 2,844 பேர் தேர்ச்சி பெற்றனர். மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுமைத்திறன் தேர்வு கடந்த ஜனவரி 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை டெல்லியில் நடந்தது.

இந்த நிலையில், தேர்வு முடிவுகளை UPSC வெளியிட்டது. இதில், ஆயிரத்து 16 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், IAS பதவிக்கு 180 பேர், IFS பதவிக்கு , 37 பேர், IPS பதவிக்கு 200 பேர், குருப்-ஏ பதவிகளுக்கு 613 பேர், குருப்-பி பதவிகளுக்கு 113 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஆதித்யா ஸ்ரீவத்சவா முதலிடத்தையும் அனிமேஷ் பிரதான் இரண்டாவது இடத்தையும், டோனூரு அனன்யா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ்நாட்டில் 42 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், அகில இந்திய அளவில் 41-வது இடத்தை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ்ராம் பெற்றுள்ளார். தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

அகில இந்திய அளவில் 78-வது இடத்தை பிடித்த டாக்டர் எஸ்.பிரசாந்த் தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

அகில இந்திய அளவில் 152 இடத்தை வெங்கேடஷ்வரனும், 472-வது இடத்தை அஞ்சுகாவும், 864 -வது இடத்தை ஹர்சவர்த்தன் ஆகியோரும் பிடித்துள்ளார். இவர்கள் மூன்று பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் .

அதபோல, சிவில் சர்வீசஸ் தேர்வில்  தமிழக மாணவர்கள் 42 வெற்றி பெற்றுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author