முக்கியச் செய்தி

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வளிமண்டலத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இந்த கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்குமாம்.. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 13-ம்தேதி கடலோர கர்நாடக பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோ
உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது?

உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது?

கடவுள் ராமர் இந்தியர் அல்ல அவர் ஒரு நேபாளி என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் நேபாளம் இடையே சமீபகாலங்களில் உறவில் சிக்கல்கள் உருவாகி வரும் நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலக வேண்டுமென்று அவரது சொந்த கட்சியினர்களே வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திய பகுதிகளை உள்ளடக்கி நேபாளத்தின் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டதற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதலும் பெறப்பட்டது இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கடவுள் ராமர் ஒரு நேபாளி என்றும், அவர் இந்தியர் அல்ல என்றும், உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது என்றும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளதாக நேபாள ஊடகங்களில் நேற்றிரவு செய்திகள் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ தமிழக அமைச்சரவைக்‌ கூட்டம்‌

எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ தமிழக அமைச்சரவைக்‌ கூட்டம்‌

முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ தமிழக அமைச்சரவைக்‌ கூட்டம்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌ இன்று மாலை 5 மணியளவில்‌ ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்‌ தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்புப்‌ பணிகள்‌ மற்றும்‌ ஊரடங்கு தளர்வுகள்‌ குறித்து விரிவாக விவாதிக்கப்படும்‌ என்று தெரிகிறது மேலும் தமிழகத்தில்‌ புதியதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள்‌, அதுகுறித்து பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள்‌ குறித்தும் ஆலோசனை நடைபெறும்‌ என கூறப்படுகிறது. இன்றைய ஆலோசனைக்கு பின் முதல்வர் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இடைத்தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்படவில்லை

இடைத்தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்படவில்லை

குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ காத்தவராயன், திருவெற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவைத் தொடர்ந்து, இரண்டு தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் மார்ச் 1ஆம் தேதி அறிவித்தது. எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் மறைந்ததையடுத்து, அவருடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:- தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலுக்கான தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் ஆன்லைனில் இந்த தேர்வின் முடிவுகளை பார்த்து வருகின்றனர். தேர்ச்சி அடைந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களில் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது cbse.nic.in www.results.nic.in www.cbseresults.nic.in மேலும் DigiResults என்ற செயலி மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடடிவக்கை எடுக்க வேண்டும்

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடடிவக்கை எடுக்க வேண்டும்

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிர்கிஸ்தான் நாட்டில், மருத்துவக் கல்வி பயின்று வருகின்றார்கள். கரோனா தொற்று காரணமாக, விடுதி அறைகளில் தங்கி இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும், பல்கலைக்கழங்கள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. எனவே, தொற்று அச்சத்தில் இருக்கின்றனர். இந்தியத் தூதரகத்தில் தொடர்ந்து விண்ணப்பித்தனர். அதன்பேரில், தமிழ்நாட்டுக்கு இரண்டு வான் ஊர்திகள் ஏற்பாடு செய்தார்கள். 324 மாணவர்கள், திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். எஞ்சியவர்களையும் மீட்டுக்கொண்டு வருவதற்கு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், உடனடியாக வான் ஊர்திகளை இயக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள
இளசை மணியன் மறைவு

இளசை மணியன் மறைவு

பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி ஆய்வாளர் இளசை மனியன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 78. மு.ராமசுப்புரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இளசை மணியன், 1942-ம் ஆண்டு பிறந்தவர். இளைசை மணியன் எழுத்தாளர், பத்திரிகையாளர், பாரதி ஆய்வாளர் என பன்முகம் கொண்டவர். பாரதி ஆய்வு, இலக்கியத் திறனாய்வு, வரலாற்று ஆய்வு, கதை, கவிதை, மொழிபெயர்ப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு பல பங்களிப்புகளை செய்துள்ளார். பாரதி தரிசனம், பாரதியாரின் இந்தியா, பென்ஷன் சிறுகதைத் தொகுப்பு, எட்டயபுரம் வரலாறு உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.இளசை மணியன் மனைவி கஸ்தூரி கடந்த ஆண்டு மறைந்தார். இவர்களுக்கு முத்துக்குமார பாரதி என்ற மகன் உள்ளார். தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ள இளசை மணியன் மூச்சுத் திணறல் ஏற
வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் கார்டு

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் கார்டு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் கார்டு எனப்படும் பணப்பரிவர்த்தனைக்கான அட்டைகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் அட்டைகள் வழங்கும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.இதனை அனைத்து வங்களின் கீழ் செயல்படும் ஏடிஎம் மையங்களிலும் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக விவசாயிகளுக்கு முதல் கட்டமாக உள்ள 160 பேருக்கு ஏடிம் அட்டைகள் வழங்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ப.சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
தில் பேச்சாரா பாடல்கள் இன்று வெளியிடு

தில் பேச்சாரா பாடல்கள் இன்று வெளியிடு

சுசாந்த் சிங் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த தில் பேச்சாரா பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுசாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான். தில் பேச்சாரா, ஜூலை 24 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கெரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம்!

கெரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம்!

கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இங்கிலாந் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கெரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து விடுபட்டவர்களில் மட்டுமே இந்த மூளை பாதிப்பை அதிக அளவில் பார்க்க முடிவதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். சிலருக்கு கொரோனாவின் முதல் அறிகுறியாக இந்த மூளை பாதிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் தற்போதுவரை, மூளை பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 12 பேருக்கு மூளை வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட