புதிய வாக்காளர்கள் மற்றும் எஸ்ஐஆர்-ல் விடுபட்டவர்களை சேர்ப்பதற்காக தமிழகம் உட்பட 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை என்பது வாக்காளர் பட்டியலை மறுசீரமைக்கும் நடவடிக்கையாகும்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்குரிமை கொண்டவர்களை கண்டறிவது, புதிய அட்டைகள் பெறும் முறை உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்
ஆனால் எஸ்.எஸ்.ஆர் என்ற சிறப்பு சுருக்கத் திருத்த முறை என்பது ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள நபர்களின் விவரங்களை மட்டும் திருத்தப்படும் நடைமுறையாகும்.
ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இந்த எஸ்.எஸ்.ஆர் நடைமுறை, சுழற்சி முறையில் அட்டவணையாக வெளியிடப்படும்
அதன்படி வெளியிடப்பட்டுள்ள எஸ்எஸ்ஆர் அறிவிப்பில், SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்காக முதற்கட்டமாக 17 மாநிலங்களில் பணிகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாடு, அசாம், பிஹார், சத்தீஸ்கர், கோவா உள்ளிட்ட 14 மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்எஸ்ஆர் மேற்கொள்ளப்படும் நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட வேண்டியவர்களுக்கு தகுதிநாளாக 2027 ஜனவரி 1ம் தேதி நிர்ணயிக்கப்படுவதாகவும்,
நவம்பர் 2ம் தேதிக்குள் வாக்கச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு நவம்பர் 12ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
மேலும், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிப்பவர்கள் நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை தாக்கல் செய்யலாம் எனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம்,
இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
