சீன ஊடகக் குழுமம் நடத்திய வசந்த கால சீனா: உலகத்துடனான சீன வாய்ப்புகளும் பகிர்வும் எனும் உலகளாவிய உரையாடல் மார்ச் 13ஆம் நாள் செனகலின் தலைநகர் டக்காரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியுன் இதில் காணொலி வழியாக உரைநிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சீனா மற்றும் செனகலின் அரசியல், வணிகம், கல்வி மற்றும் செய்தி ஊடகத் துறைகளைச் சேர்ந்த சுமார் 70 விருந்தினர்கள் கலந்து கொண்டு சீனப் பாணி நவீனமயமாக்கல் ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு மற்றும் திறன்கள் குறித்து விவாதம் நடத்தினர்.