Breaking: டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு… சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!! 

Estimated read time 1 min read

நாடு முழுவதும் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தப் (SIR) பட்டியலில் மாபெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தொடர் போராட்டங்கள் காரணமாக தில்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பண்டிகை கால வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறி வணிகர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், போராட்டத்திற்கு எதிராக எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். ஏற்கனவே தில்லி உயர் நீதிமன்றமும் போராட்டத்திற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இவ்வழக்கின் விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

You May Also Like

More From Author