மும்பையில் தொடரும் கனமழை: இன்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; ரயில்கள் ரத்து  

Estimated read time 1 min read

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் அதிதீவிர பருவமழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் நகரில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று ரெட் அலர்ட் காரணமாகக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மழை நீடிப்பதால் இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவசரத் தேவையின்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் 1916 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

More From Author