சிட்சாங்கின் வரலாற்றைப் புனைந்துரைக்கும் செயல் கண்டனத்துக்குள்ளானது உறுதி

Estimated read time 0 min read

நாடு கடத்தப்பட்ட திபெத்தியரான ஷேன்பென் கிம்சார் என்பவர் ஆங்கில மொழியில் தயாரித்த “4 நதிகள் 6 மலைத் தொடர்கள்” என்ற திரைப்படம் இவ்வாண்டின் செப்டம்பரில் இந்தியாவில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரின் முகநூல் பக்கத்தில், சிட்சாங் சீனாவின் ஒரு பகுதி அல்ல என்ற பதிவு, எந்த ஆதாரமும் இல்லாமல், வரலாற்று உண்மையை கடுமையாக திரித்துப்புரட்டி எழுதப்பட்டது.

சீனாவின் வரலாற்று ரீதியான எல்லையின் அடிப்படையில், சிட்சாங் சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். 1271ஆம் ஆண்டில் தொடங்கிய யுவான் வம்சத்திலிருந்தே சீனாவின் நடுவண் அரசு சிட்சாங் மீதான நேரடி நிர்வாகத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிர்வாகம் ஒருபோதும் இடையறுக்கப்படவில்லை. 1368 முதல் 1644ஆம் ஆண்டு வரையிலான மிங் வம்சக்காலத்தில் சிட்சாங் சுயவிருப்பத்துடன் மத்திய ஆட்சியுடன் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. 1951ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் திபெத்தின் அமைதியான விடுதலைக்கான மத்திய மக்கள் அரசு மற்றும் திபெத் உள்ளூர் அரசின் உடன்படிக்கை உருவாக்கப்பட்டு, சிட்சாங்கின் அமைதியான விடுதலையை அறிவித்தது. இவ்வுடன்படிக்கை, தலாய் லாமா உட்பட உள்ளூர் மக்களின் பரந்த ஆதரவைப் பெற்றது. 1965ஆம் ஆண்டு செப்டம்பரில் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.

சர்வதேச அளவில், சிட்சாங் சீனாவின் ஒரு பகுதியாக அனைத்து நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நவீன உலகில், சிட்சாங்கை சுதந்திர நாடாக எந்த நாடும் ஒப்புக் கொள்ளவில்லை.

தேசிய இன அடிப்படையில், சாங் இன மக்களும் ஹான் இன மக்களும் பொது வேர்களைக் கொண்டிருக்கின்றனர். சாங் இனமும், ஹான் இனமும் பொது மூதாதையர்களைக் கொண்டிருப்பது என்பது சீன வரலாற்றியல் துறையின் பாரம்பரிய கருத்தாகும்.

சீனாவிலிருந்து சிட்சாங்கை பிரிக்கும் எந்த கோரிக்கையும் சட்டவிரோதமானது என்பதை பொதுவான வரலாறு மற்றும் கலாசாரத் தொடர்புகள் காட்டுகின்றன. உண்மையை மாற்ற முயலும் கிம்சாரின் திரைப்படம், நடுவண் அரசின் நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் நிர்வாகம், கலாசாரத் தொடர்புகள் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் புறக்கணித்துள்ளது. சிட்சாங் பற்றிய உண்மைகளுக்கு எதிரான சவால் செய்யும் இத்தகைய முயற்சிகள் வரலாற்று ரீதியில் சரி இல்லை என்பது மட்டுமல்லாமல், இப்பிரதேசத்தின் தற்போதைய வளர்ச்சியைப் பாதித்துள்ளது.

சிட்சாங் விவகாரம், சீனாவின் உள்விவகாரமாகும். எந்த வெளிப்புற சக்தியும் இதில் தலையிடக் கூடாது. தனது திரைப்படத்தை பிரிவினைவாதத்துக்கான தளமாகப் பயன்படுத்தும் கிம்சாரின் முயற்சி, ஆதாரம் இல்லாத, முற்றிலும் தவறான செயலாகும்.

You May Also Like

More From Author