வணிக கேஸ் சிலிண்டர் விலை 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு  

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்றது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.
இன்று ஆகஸ்ட் 1 என்பதால், வணிக சிலிண்டரின் விலை மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்து ரூ.1,817-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, கடந்த 4 மாதங்கள் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது இதன் விலை உயர்ந்துள்ளது.

You May Also Like

More From Author