திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, பராசக்தி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்தான மண்டபத்தில் இருந்து பராசக்தி அம்மன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சரவிளக்கு ஆராதனை, பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.