அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின்  

Estimated read time 0 min read

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காக ஒரு சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அவரது அறிவிப்புகளில் முக்கியமானதொன்று, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்வு.
அதேபோல, பண்டிகை கால முன்பணம் ₹10,000இல் இருந்து ₹20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ₹5 லட்சம் ஆக உயர்த்தப்படுகிறது.
ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ₹4,000இல் இருந்து ₹6,000 ஆக உயர்வு பெற்றுள்ளது.
சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ₹1,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈட்டிய விடுப்புகளை சரண செய்து பலன் பெறும் திட்டம் இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author