8ஆவது எண்ணியல் சீனா உச்சிமாநாடு 29ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை, தென் சீனாவின் ஃபூசோ நகரில் நடைபெற்றது. இதில் எண்ணியல் மற்றும் நுண்ணறிவு உயர் தர வளர்ச்சியை வழிகாட்டுதல் என்ற தலைப்பில், கருத்தரங்கு, எண்ணியல் சீனா புத்தாக்கம் போட்டி உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றன.
2024ஆம் ஆண்டு சீனாவின் எண்ணியல் பொருளாதாரம் அதிகரித்து வருகிறது. எண்ணியல் பொருளாதாரத் தொழில் துறையின் உற்பத்தி மதிப்பு, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 விகிதத்தை வகிக்கிறது. மொத்த தரவு உற்பத்தி அளவு 41.06 ஜிபியை எட்டி, 2023ஆம் ஆண்டை விட 25 விழுக்காடு அதிகரித்துள்ளது.