உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 28ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு, பல தரப்புவாதத்தைப் பாதுகாத்து, பல தரப்பு வர்த்தக விதிகளைப் பேணிக்காப்பது குறித்து சீனாவின் நிலைப்பாடுகளை வெளியிட்டார்.
அவர் கூறுகையில்,
2ஆவது உலக போருக்கு பின் சர்வதேச ஒழுங்குகளுக்கான அடித்தளமாக பல தரப்புவாதம் விளங்குகிறது. ஒருதரப்புவாதத்தை அமெரிக்கா பின்பற்றி, சொந்த நாட்டின் உரிமைகளுக்கு முன்னுரிமையை வழங்கி, சொந்த நாட்டின் நலன்களைக் கவனித்து, சர்வதேச சமூகத்தின் பொது நலன்களின் மீது மேலாதிக்கம் செய்து, சர்வதேச உறவின் வளர்ச்சிக்கான அடிப்படையை தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளது என்றார் அவர்.
பல தரப்புவாத வர்த்தக விதிகளைப் பேணிக்காப்பது என்பது தற்போது மிகவும் அவசியமாகும். தாராள வர்த்தகத்திலிருந்து அமெரிக்கா பயன்களைப் பெற்றுள்ளது. மாறாக, தற்போது, அளவுக்கு மீறிய சுங்க வரியின் மூலம், பல நாடுகளுக்கு நிர்பந்தத்தை திணிக்கத் தொடங்கியுள்ளது. மௌனம், சமரசம் செய்தால், பழிவாங்கல் தீவிரமாகி மாறும் என்றும் அவர் வலியுறுத்தினார்.