ஊட்டி மலை ரயில் தினம்: கேக் வெட்டி கொண்டாட்டம்..!

Estimated read time 0 min read

நீலகிரி மலை ரயிலின் 118வது தினம் ஊட்டி ரயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1899 ஜூன், 15 முதல் மேட்டுப்பாளையம்– குன்னுார் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. 1909 அக் ., 15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை ரயில் சேவை நீடிக்கப்பட்டது. இந்த தினத்தில் ஆண்டுதோறும் நீலகிரி மலை ரயில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று, ஊட்டி ரயில் நிலையத்தில் மலை ரயில் ரத அறக்கட்டளை சார்பில் என்.எம்.ஆர் ., தினம் கொண்டாடப்பட்டது.

ரயிலில் வந்த சுற்றுலா பயணிகளை மலை ரயில் ரத அறக்கட்டளை தலைவர் நடராஜ் , ரயில்வே அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து , கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது. ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட பாரம்பரிய ரயிலின் மியூசியத்தை அனைவரும் பார்வையிட்டனர். கொண்டாட்டத்தின்போது ரயில்வே அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி மகிழ்ந்தனர். மலை ரயிலின் சிறப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.

You May Also Like

More From Author