கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 அதிகரிப்பு!

Estimated read time 1 min read

தங்கம் மற்ற நாடுகளில் ஒரு முதலீடாக மட்டுமே பார்க்கப்படும் நிலையில் நமது நாட்டில் மக்களின் கலாச்சாரம், கௌரவம் மற்றும் சொத்துமதிப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் விலையேற்றம் இருந்தாலும் கூட பெரும்பாலானோர் தங்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி சேமிப்பதை நிறுத்துவதில்லை. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்த போதிலும் இன்று சற்று அதிகரித்திருக்கிறது.

நேற்று (அக்டோபர் 8) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி 1 கிராம் தங்கம் ரூ.13,710-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,680-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது.

இன்று (அக்டோபர் 9) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.105 உயர்ந்து ரூ.13,815-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.840 உயர்ந்து, ரூ.1,10,520-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

You May Also Like

More From Author