சீன ஊடகக் குழுமம் மற்றும் அமெரிக்காவுக்கான சீனத் தூதரகம் கூட்டாக நடத்திய புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வு வளர்ச்சிக்கான உலக உரையாடல் நிகழ்ச்சி அக்டோபர் 24ஆம் நாள் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநருமான ஷென் ஹாய்சிவுங் காணொளி வழியாக இதில் உரைநிகழ்த்தினார். அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சியென்ஃபுங் இதில் முக்கிய சொற்பொழிவு ஆற்றினார். இதில் சர்வதேச பிரச்சினைக்கான நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் அமெரிக்காவின் இளைஞர் மாணவர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
சீனா, வலுவான அறிவியல் தொழில்நுட்பத் திறன் மூலம் உலகப் புத்தாக்கத்துக்கு உந்து ஆற்றலை வழங்குவது, உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி உலகத்துடன் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது முதலிய அம்சங்கள் குறித்து அவர்கள் ஆழமாகப் பரிமாற்றம் கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனம் முதலிய புத்தாக்க அறிவியல் தொழில்நுட்ப துறையில் சீனாவின் வளர்ச்சி பற்றிய காணொளிகளை இவ்வுரையாடலின் போது விருந்தினர் கண்டறிந்தனர். உலகின் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்தில் சீனா முக்கிய வழிகாட்டல் பங்களிப்பை ஆற்றியுள்ளதாகவும், மனிதகுலத்தின் வளர்ச்சி மற்றும் உலக நிர்வாகத்துக்குச் சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பங்காற்றுமெனவும் பல்வேறு துறையினர்கள் கருத்து தெரிவித்தனர்.
