தமிழகத்தில் வாட்ஸ்அப்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்: முழு விவரங்கள்  

Estimated read time 1 min read

தமிழகத்தில் அவசர கால மருத்துவ தேவைகளுக்காக செயல்பட்டு வரும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவையை, இனி வாட்ஸ்அப் மூலமாகவும் எளிதாக பெறலாம்.
இந்த புதிய வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று தொடங்கி வைத்தார்.
ஆம்புலன்ஸ் தேவைப்படுபவர்கள் ‘94450 30725’ என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ‘Hi’ என டைப் செய்து அனுப்ப வேண்டும்.
1. உடனடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் ‘Book Ambulance’ என்ற லிங்க் வரும்.
2. அதைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் Live Location-ஐ கட்டுப்பாட்டு அறைக்கு துல்லியமாக தெரிவிக்க முடியும்.
3. உடனடியாக ஆம்புலன்ஸ் எண் மற்றும் ஓட்டுநரின் மொபைல் எண் உங்களுக்கு அனுப்பப்படும்.

You May Also Like

More From Author