சென்னையில் உலக பெருங்கடல் அறிவியல் மாநாடு-2024!

உலக பெருங்கடல் அறிவியல் மாநாடு சென்னையில் தொடங்கியது. நீல பொருளாதாரத்தில் பெருங்கடல்களின் நிலையான பயன்பாடு என்ற கருப்பொருளுடன் மூன்று நாள் மாநாடு நடைபெறுகிறது.

உலகப் பெருங்கடல் அறிவியல் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. சுற்றுலா, கடற்படை மற்றும் பாதுகாப்பு, கடல்சார் தொழில்கள், போக்குவரத்து, துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாடு, ‘நீலப் பொருளாதாரத்தில் பெருங்கடல்களின் நிலையான பயன்பாடு’ என்ற கருப்பொருளுடன் நடத்தப்படுகிறது.

கடலோர உள்கட்டமைப்பு மேம்பாடு, கடலோர மாநிலங்கள் மற்றும் தீவுகளில் சுற்றுலா மேம்பாடு, கடல் மற்றும் கடலோர மீன்வள மேம்பாடு, கடல் உயிரி தொழில்நுட்பம், பெருங்கடல்களின் வெப்பமயமாதல், கடல் மாசுபாட்டைத் தடுத்தல் போன்றவை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

தொடக்க விழாவில், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜி.ஏ.ராமதாஸ், ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் டாக்டர் ரஞ்சித் ராத், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் செயலாளர் எம். ராமச்சந்திரன் பங்கேற்கிறார். இரண்டாம் நாளில் மீனவர்களுக்கான கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author