காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை அடுத்து காஷ்மீரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் நேற்று (புதன்கிழமை) ஸ்ரீநகரில் இருந்து 7 கூடுதல் விமானங்களை சேர்க்கப்பட்டது. அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழர்கள் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் இன்று காலை வந்தடைந்தனர்.
2ஆம் கட்டமாக 50 பேர் விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னை வந்த அவர்கள் விரைவாக மீட்புக்குழு அமைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் பிழைத்தோம். பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சுற்றுலா தலங்களை நேற்றும் பார்வையிட்டோம். ஊர் திரும்ப தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு சிறப்பாக செய்திருந்தது” என்று உருக்கமாக பேட்டியளித்தனர்.