சேவைக் கட்டணங்கள் தொடர்பான சர்ச்சையில், பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய மொபைல் ஆப்களை மீட்டெடுப்பதற்கான செயல்முறையை கூகுள் தொடங்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுடன் கூகுள் நிறுவனத்தின் அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சேவைக் கட்டணம் செலுத்துதல் தொடர்பான சர்ச்சையில், பாரத் மேட்ரிமோனி போன்ற சில பிரபலமான மேட்ரிமோனி ஆப்கள் உட்பட 10 நிறுவனங்களின் ஆப்களை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நேற்று அகற்றியது.
இந்தியாவில் உள்ள 94% போன்கள் ஆண்ட்ராய்டுகளாக இருப்பதால், பிளே ஸ்டோர் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ஆப் ஆகும்.