நெல்லை மாவட்டம் முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் அருகில் வைத்து இந்திய வீரக்கலை சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் மற்றும் கராத்தே தேர்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், பூலான்குளம், ஏபிஎன், வள்ளியம்மாள் புரம், மைலப்பபுரம், ஆவுடையானுர், அழக பெருமாளூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வீரக்கலை மாணவ மாணவியர் வந்திருந்து சிலம்பம் மற்றும் கராத்தே தேர்வில் கலந்து கொண்டனர்.
இப்போட்டிக்கு இந்திய வீரக்கலை சங்க தலைவர் R.B. சேகர் தலைமை தாங்கினார்.
வீரக்கலை ஆசிரியர்கள் ஹரிஹரன், சக்தி முருகன், முண்டசாமி, பிரசாந்த், சூர்ய பிரகாஷ், லெட்சுமி, ரமேஷ் மணி ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள்.
முடிவில் தேர்வில் வெற்றி பெற்று மாணவ
மாணவியர்களுக்கு முக்கூடல் காவல் உதவி ஆய்வாளர் மாபுஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீரக்கலை ஆசிரியர் ஹரிஹரன் சிறப்பாக செய்திருந்தார்.