ஹுனான் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமானந ஷி ச்சின்பிங் அக்டோபர் 16ஆம் நாள் கடிதம் ஒன்றை அனுப்பி, இப்பல்கலைக்கழகத்தின் அனைத்து பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரித்தார்.
புதிய துவக்கப் புள்ளியில் ஹுனான் பல்கலைக்கழகம் புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையை வழிகாட்டலாகக் கொண்டு, சிறந்த புரட்சிகரப் பாரம்பரியங்களை முன்னெடுத்துச் சென்று, தனது கற்பித்தலின் தரம் மற்றும் நிலையைத் தொடர்ந்து உயர்த்த வேண்டும். அதோடு, கல்வித் துறையில் முன்னணி நாடாக சீனாவைக் கட்டியெழுப்புவதற்கும் சீனாவின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கும் புதிய பங்காற்றும் வகையில் மேலதிக திறமைசாலிகளைப் வளர்க்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தனது வாழ்த்துக் கடிதத்தில் வலியுறுத்தினார்.
