“ஷிச்சின்பிங்: சீனாவின் ஆட்சி முறை” எனும் நூலின் 5ஆவது தொகுதி பிரான்சு, ரஷிய, அரபு, ஸ்பேன், போர்த்துகீஸிய, ஜெர்மன், ஜப்பானிய மற்றும் பாரம்பரிய சீன மொழி உள்ளிட்ட 8 வகை மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு மே 27 முதல் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் வரையான காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் வழங்கிய உரை மற்றும் எழுத்துப்பூர்வமான படைப்புகள் முதலிய 91 கட்டுரைகளும், தங்களது 41 நிழற்படங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய காலத்தில் சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச பற்றிய ஷிச்சின்பிங் சிந்தனையின் புதிய சாதனைகள் பன்முகங்களிலும் தொகுதியாகவும் இதில் வெளிகாட்டப்பட்டுள்ளன.
சர்வதேச சமூகம், இச்சிந்தனையின் புதிய வளர்ச்சியை காலதாமதமின்றி அறிந்து கொள்வதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது.
