வெளிநாட்டு முதலீட்டு நிர்வாக நடவடிக்கைகள் சீனா வெளியீடு

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் 22ஆம் நாள், சீனாவின் வெளிநாட்டு முதலீட்டுக்கான நிர்வாக நடவடிக்கைகளை வெளியிட்டது.

இதன்படி வெளிநாட்டில் செய்யப்படும் முதலீட்டு வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் அமைப்புமுறை ரீதியில் மேலும் வலுவான உத்தரவாதம் அளிக்கப்படும். இந்நடவடிக்கைகள் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் நாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீட்டு நிர்வாகத்துக்கான நடவடிக்கைகள் நீக்கப்படும். 

வெளிநாட்டு முதலீட்டின் உயர்தர வளர்ச்சியை விரைவுபடுத்தி, வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்களின் சட்டப்பூர்வமான உரிமை நலன்களைப் பாதுகாத்து, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிக்காப்பது என்பது இந்நடவடிக்கைகளின் நோக்கமாகும். 

You May Also Like

More From Author