தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 44 சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கம்  

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக 44 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது.

“தீபாவளியை முன்னிட்டு, சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், பிற சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படும்,” என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அடுத்த 11ஆம் தேதி ஆயுத பூஜை மற்றும் 12ஆம் தேதி விஜயதசமி கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்றும் நாளையும் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

You May Also Like

More From Author