னோம் பென் ராயல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேசப் பிரச்சினை மற்றும் பொதுக் கொள்கை ஆய்வகத்தின் தலைவர் நியாக் சந்தாரித் எழுதிய “கம்போடியா மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளின் மீதான சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தூதாண்மை கட்டுக்கோப்பு” பற்றிய கட்டுரை, அண்மையில் அந்நாட்டின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரையில், தற்போது சர்வதேச ஒழுங்கில் முன்னெப்போதும் கண்டிராத ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம் பற்றிய சிந்தனையைச் சீனா செயல்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ள நான்கு உலகளாவிய முன்மொழிவுகளின் மூலம் இச்சிந்தனை நடைமுறைக்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளாவிய பொருளாதார முன்மொழிவு, பொருளாதார அடிப்படையை வலுப்படுத்துகிறது. உலகளாவிய பாதுகாப்பு முன்மொழிவு, அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காக்கிறது. உலகளாவிய நாகரிக முன்மொழிவு, ஒன்றுக்கொன்று நாகரிக நம்பிக்கையை அதிகரிக்கிறது. உலகளாவிய ஆட்சிமுறை முன்மொழிவு, சர்வதேச அமைப்புமுறையின் சீர்திருத்தத்தை முன்னேற்றுகிறது. இந்த நான்கு முன்மொழிவுகள், கம்போடியாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியிலுள்ள முன்னுரிமை விவகாரங்களுக்குப் பொருந்தியதாகவும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
