4வது லியாங்ஜு மன்றக் கூட்டம் துவக்கம்

சீனாவின் ச்சேஜியாங் மாநிலத்தின் ஹாங்ச்சோ நகரில் 4வது லியாங்ஜு மன்றக் கூட்டம் அக்டோபர் 18ம் நாள் துவங்கியது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் துணை தலைவர் ஜியாங் ஷின்ச்சு இதன் துவக்க விழாவில் உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், திறந்த மனப்பான்மையுடன் தொல்லியல் மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வத் துறையின் சர்வதேச ஒத்துழைப்பை சீனா எப்போதும் ஊக்குவித்து, மனித குலத்தின் பொது பண்பாட்டு மரபுச் செல்வங்களைப் பேணிக்காத்து வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலக நாகரிக முன்மொழிவை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும். நாகரிகத்தைப் பாதுகாத்து, சர்வதேச ஒத்துழைப்பை ஆழமாக்கி, நாகரிகம் சார்ந்த தொடர்பை விரிவாக்கி, வளர்ச்சி சாதனைகளைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இம்மன்றக் கூட்டத்தில் சுமார் 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பண்பாட்டுத் துறை அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பண்பாட்டு மரபுச் செல்வ நிபுணர்கள் முதலியோர் பங்கெடுத்து வருகின்றனர்.

லியாங்ஜு பண்டைய நகர இடிபாடுகள், சுமார் கி.மு. 5300 முதல் 4300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு ஆரம்பகால அரசாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author