இஸ்ரேலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட்டிற்கு புதிய அரசாங்கத்தை அமைக்க அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களையும், எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றின. அரபு கட்சிகளான ஜாயின்ட் லிஸ்ட் 11 இடங்களிலும், ரா-அம் கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதையடுத்து, அரபு கட்சிகளின் ஆதரவுடன் காடி ஐசென்காட்டிற்கு 67 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரை ஆட்சி அமைக்க அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைத்துள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ ஆணையைப் பெற்றுள்ள ஐசென்காட்டிற்கு, புதிய அரசாங்கத்தை அமைக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு வழங்கவும் அதிபருக்கு அதிகாரம் உள்ளது.
