ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைபடி, பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது.
மகிழ்ச்சி குறியீட்டில் கடந்த ஆண்டைப் போலவே இந்தியா 126வது இடத்தில் உள்ளது.
பின்லாந்தை தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட 10 நோர்டிக் நாடுகளும் தங்கள் இடங்களை தக்க வைத்துள்ளன.
2020இல் தாலிபான்கள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்ததிலிருந்து மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், கணக்கெடுக்கப்பட்ட 143 நாடுகளில் கடைசி இடத்தில் உள்ளது.
அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து முதல் முறையாக, அமெரிக்காவும் ஜெர்மனியும் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இல்லை. மாறாக முறையே 23 மற்றும் 24 வது இடத்தில் வருகின்றன.