உலகிற்கு நலன்கள் தரும் சீனச் சர்வதேச இறக்குமதி கண்காட்சி

உலகளவில் இறக்குமதியை கருப்பொருளாக கொண்ட தேசிய நிலை கண்காட்சியான சீனச் சர்வதேச இறக்குமதி கண்காட்சியானது, சீனா புதிய வளர்ச்சி முறையைக் கட்டமைப்பதற்கான ஜன்னலாகவும், உயர் நிலை திறப்பை முன்னெடுப்பதற்கான மேடையாகவும், உலகளவில் பகிரப்பட்ட சர்வதேச பொது நிகழ்வாகவும் மாறியுள்ளது. இவ்வாண்டின் இறக்குமதி கண்காட்சியில் கவனத்துக்குரிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. 148 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4142 வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த கண்காட்சிகளை விட மிக அதிகமாக உள்ளது. இதில், உலகளாவிய ‘ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள நிறுவனங்கள், தொழில்துறைகளில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது. சுமார் 200 தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து 9 ஆண்டுகளாக இக்கண்காட்சியில் பங்கெடுத்தன. அமெரிக்க தொழில் நிறுவனங்களின் கண்காட்சி பரப்பளவு தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலிடத்தைப் பிடித்துள்ளன. மேலும், உலகளவிலும் ஆசியாவிலும் சீனாவிலும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவ தயாரிப்புகளின் எண்ணிக்கை 480க்கு மேல் இருந்து, புதிய உச்சத்தை எட்டியது. சர்வதேச பொதுக் கருத்துகளில், “சீனச் சந்தையில் மாபெரும் வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன”, ”உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்பு ஜன்னல்” போன்ற சாதகமான மதிப்பீட்டை இக்கண்காட்சிக்கு வழங்கி வருகின்றது.

தவிர, இவ்வாண்டின் சீனச் சர்வதேச இறக்குமதி கண்காட்சி, “சீனாவிற்கு ஏற்றுமதி செய்தல்” என்ற வருடாந்திர கருப்பொருள் நாடு என்ற நிகழ்வுடன் முதன்முறையாக இணைக்கப்பட்டது என்பதும், சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் திறன் வளர்ச்சி அறிக்கை முதன்முறையாக வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கவை. இந்த அறிக்கையானது சீனாவிற்கு ஒவ்வொரு நாட்டின் ஏற்றுமதியின் செயல்திறன் மற்றும் உள்ளார்ந்த ஆற்றலை ஆய்வு செய்யும். அதேவேளையில், இவ்வறிக்கையில் தேவைக்கு இணங்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன. எதிர்காலத்தில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை மூலம் சீன சந்தையின் நலன்களை பல நாடுகள் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author