ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீநகரின் முக்கியப் பகுதியான லால் சவுக்கில் பாதுகாப்பு அமைப்புகள் நான்கு தேடப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும் பதாகைகளையும் ஒட்டியுள்ளன. அவர்களின் நடமாட்டம் அல்லது இருப்பிடம் குறித்து நம்பகமான தகவல் தெரிந்தால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்புகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் சோபோர் பகுதியைச் சேர்ந்த பிலால் அகமது மீர், முகமது உமர் மீர், குல்காமைச் சேர்ந்த முகமது லத்தீப் பட், பாரமுல்லாவைச் சேர்ந்த ஆபித் கயூம் லோன் ஆகிய நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் முகமது லத்தீப் பட், கடந்த ஜூலை மாதம் அனந்த்நாக் பகுதியில் காவலர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.
இந்தப் பயங்கரவாதிகள் குறித்த நம்பகமான தகவல்களை வழங்குபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நடமாட்டம், இருப்பிடம் அல்லது செயல்பாடுகள் குறித்து உறுதியான தகவல் கிடைத்தால், சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு எண்கள் மூலம் உடனடியாகத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த அக்டோபர் 17-ம் தேதி குப்வாரா மாவட்டத்தின் கேரன் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்ட பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
#WATCH | J&K | Security agencies have released photographs of four active wanted terrorists in Srinagar and appealed to the public to share any credible information regarding their movement or presence https://t.co/MMNj4pqHzt
— ANI (@ANI) November 8, 2026
