வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியா வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தனது வெளிநாடு வாழ் இந்தியர் தினத்தை கொண்டாடுகிறது.
இந்திய வளர்ச்சியில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கை கௌரவிப்பதற்காகவும், அவர்களுக்கும் தாய்நாட்டிற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்காகவும் இந்த நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் தேதியின் பின்னால் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணம் உள்ளது. 1915 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதிதான், மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார்.
காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரு புலம்பெயர்ந்தவர் என்ற முறையில், அவர் இந்தியா திரும்பி நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியது ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.
எனவே, அவரது வருகையைக் குறிக்கும் வகையில் இந்தத் தேதி தேர்வு செய்யப்பட்டது.
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் ஏன் ஜனவரி 9 தேர்ந்தெடுக்கப்பட்டது? வரலாற்றுப் பின்னணி
