சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிஅரசியல் குழு உறுப்பினரும்
, மத்திய வெளியுறவு விவகார ஆணையத்தின் அலுவலக இயக்குநருமான
வாங்யீ 15ஆம் நாள் ஹாங்சோ நகரில் பிரெஞ்சு அரசுத் தலைவரின் வெளியுறவு விவகார ஆலோசகர்
இம்மானுவேல் போனுடன் இணைந்து 27ஆவது சீன-பிரான்ஸ் நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், பிரான்ஸுடன்
இணைந்து உயர் நிலைத் தொடர்பை வலுப்படுத்தி, நெடுநோக்கு
ரீதியில் பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கி, பன்முகங்களிலும் சீன – பிரான்ஸ் ஒத்துழைப்பை
முன்னேற்றச் சீனா விரும்புகிறது என்றார். மேலும்
மேலும், சீனா
ஐ.நாவின் கட்டுக்கோப்பில் பிரான்ஸுடன் பலதரப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும்
அவர் கூறினார்.
ஒரே சீனா என்ற கொள்கையைப் பிரான்ஸ் உறுதியாகப்
பின்பற்றி வருகிறது. சீனாவுடன் இணைந்து ஒன்றுக்கொன்று சமத்துவம் மற்றும் நன்மை தரும்
எழுச்சியில் வர்த்தக மற்றும் பொருளாதாரம், அமைதி
நோக்கிற்கான அணு ஆற்றல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புதிய எரியாற்றல் முதலிய துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரான்ஸ் விரும்புவதாகப்
போன் தெரிவித்தார்.