சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

Estimated read time 0 min read

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, தி.நகர், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

You May Also Like

More From Author