I
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 3வது கூட்டத்தொடர், மார்ச் 10ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில் நிறைவடைந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 3வது கூட்டத்தொடரின் நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கை இதில் நிறைவேற்றப்பட்டது. திட்டமிடப்பட்ட வேறு நிகழ்ச்சி நிரல்களும் இதில் நிறைவேற்றப்பட்டுள்ளன.