மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அதிகாரப் போட்டியும் பாதுகாப்பு சூழலும் வேகமாக மாறிவரும் வேளையில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நேட்டோ பாணியிலான புதிய முத்தரப்பு ராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன.
இதன் படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒட்டுமொத்தக் கூட்டணியின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டாகப் பதிலடி கொடுக்கப்படும்.
இந்த சக்திவாய்ந்த கூட்டணி மத்திய கிழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டமைப்பில் எகிப்தும் இணைய வாய்ப்பு; மத்திய கிழக்கில் புது பரபரப்பு
