அசாமில் நீடித்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் நீடித்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. கோலாகாட், சிவசாகர், ஜோர்ஹாட் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1.68 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். 55 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் 10,748.64 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 47,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல மாவட்டங்களில் வெள்ள நீரால் கரைகள், சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளநீரால் தண்டவாளங்கள் சேதமடைந்ததன் காரணமாக, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகத் தடைபட்டிருந்த சிவசாகர் மாவட்டம் வழியாக செல்லும் ரயில் இணைப்பு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே (NFR) தெரிவித்துள்ளது.
