தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகத் தொடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கி வரும் இஸ்ரோவின் முதன்மை ஏவுதளத்தைத் தொடர்ந்து, நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள புவியியல் அமைப்பு காரணமாக, இங்கிருந்து குறைந்த எரிபொருளைப் பயன்படுத்தி சிறிய வகை ராக்கெட்டுகளை மிக எளிதாக விண்ணில் செலுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
தனியார் மயமாகிறது குலசேகரன்பட்டினம் ஏவுதளம்- தனியாருக்கு மத்திய அரசு அழைப்பு!
