கடந்த மாதம் அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட காரணத்தினால், மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, தற்போது மீண்டும் இரு நாட்டிற்கும் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளதால், தங்கத்தின் விலையை கணிக்க முடியாத சூழல் உள்ளது.
கடந்த வாரம் தங்கத்தில் விலை காலை, மாலை என மாற்றம் கண்ட நிலையில், தொடர் சரிவை கண்டு வருகிறது. இந்த மாதத்தில் இதுவரை இருந்த விலைகளிலேயே மிகக்குறைந்த விலையாக இன்று ஒரு கிராம் ரூ. 13,150-க்கும், ஒரு சவரன் ரூ. 1,05,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடியாக குறைந்தது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,600க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.400 குறைந்து ரூ.1,05,200க்கு விற்கப்படுகிறது.
மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13, 150க்கு விற்கப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.235க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5000 குறைந்து ரூ.2,35,000க்கும் விற்கப்படுகிறது.
